நான் பேசற இங்கிலிஷ் புரிஞ்சதா? செண்ட்ராயனை கலாய்த்த கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் தமிழில் தான் பேச வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் போட்டியாளர்களில் பலர் ஆங்கிலத்தில் தான் பேசி வருகின்றனர். சிலசமயம் சேனல் நிர்வாகம் தமிழில் சப்டைட்டில் போடும் அளவுக்கு ஆங்கில பேச்சின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது.
அதுமட்டுமின்றி சண்டை போடும்போது கூட ஆங்கிலத்தில் பேசி சண்டை போடுவதால் நாம் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றோமா அல்லது ஹாலிவுட் படம் பார்க்கின்றோமா? என்ற சந்தேகம் கூட சிலசமயம் வருவதுண்டு.
இந்த நிலையில் மற்றவர்கள் தான் தமிழ் சரியாக வராது ஆங்கிலம் நன்றாக தெரியும், என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்றால், ஆங்கிலம் அரைகுறையாக தெரிந்த செண்ட்ராயன் கூட சிலசமயம் கொச்சையான ஆங்கிலத்தில் பேசி வெறுப்பேற்றி வந்தார்
இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த புரமோ வீடியோவில் 'கமல் ஸ்டைலான ஆங்கிலத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க, செண்ட்ராயன் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். பின்னர் செண்ட்ராயனிடம் 'நான் பேசற இங்கிலீஷ் புரிஞ்சதா செண்ட்ராயன்? என்று கமல் கேட்க அதற்கு செண்ட்ராயன் பரிதாபமாக தலையை ஆட்ட, 'நீங்க பேசற இங்கிலீஷ் மாத்திரம் புரியும்ன்னு எப்படி நாங்க நம்பலாம்' என கூற பார்வையாளர்களும் போட்டியாளர்களும் இடைவெளி இன்றி சிரிக்கும் காட்சி இன்றைய ஹைலைட் காட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நான் பேசுறது புரிஞ்சிச்சா உங்களுக்கு?! ?????? #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/cPXEbEts5V
— Vijay Television (@vijaytelevision) June 23, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments