கமல்ஹாசனுக்கு தக்க பதிலடி தரப்படும்: உதயநிதி ஸ்டாலின்

  • IndiaGlitz, [Monday,February 18 2019]

கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், திமுக,அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளையும் ஆரம்பம் முதலே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதேபோல் அதிமுக அமைச்சர்களும், திமுக பிரபலங்களும் கமல்ஹாசனுக்கு பதிலடி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் திமுகவின் ஊழல் பொதிகளை சுமக்க தான் தயாராக இல்லை என்றும், தான் ஆரம்பித்து வைத்த கிராம சபையை திமுக காப்பி அடிப்பதாகவும், நான் சட்டசபையில் இருந்து வெளியே வரும்போது சட்டையை கிழித்து கொண்டு வெளியே வரமாட்டேன் என்றும் கமல் திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் தாக்கியிருந்தார்.

கமல்ஹாசனின் இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார். கிராம சபை கூட்டங்களை திமுக காப்பியடிக்கவில்லை. திமுக தலைவர் முதல்முறையாக கிராமத்திற்கு போவதாக கமல் கூறியது தவறானது. அவரது விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் கமல்ஹாசனின் கருத்து குறித்து நடிகர் ராதாரவி கூறியபோது, 'திமுகவை ஊழல் மூட்டை என சொல்லும் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்து பரிசுத்த ஆவியாக இருக்கட்டும். கமல்ஹாசன் நல்ல நடிகர். ஆனால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியாததால் அரசியலுக்கு வந்துள்ளார்' என்று கூறியுள்ளார்.

 

More News

'தளபதி 63' படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் சினிமாவிலும் பாடி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்

அர்ஜூன் ரெட்டி புதிய தமிழ் ரீமேக்கின் இயக்குனர் யார்?

சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் சென்சார் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் திடீரென கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு

உன் லெவலுக்குத்தான் வாலாட்டனும்: Mr.லோக்கல் டீசர் விமர்சனம்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்; திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

கல்லூரி வளாகத்தில் பீர்பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட மாணவிகள்: வைரலாகும் வீடியோ

ஒடிசா மாநிலத்தில் புரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் கையில் பீர் பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவு அளிப்போம்: நடிகர் சங்கம் அறிக்கை

காஷ்மீர் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர்.