ஜல்லிக்கட்டு, தமிழக அரசியலை அடுத்து கமலின் அடுத்த பார்வை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசனின் சமூக வலைத்தள பக்கம் சூடான கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இதனால் அவருடைய பக்கத்தின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை எகிறி வருகிறது.
முதலில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர் கூறிய கருத்து, பின்னர் தமிழக அரசியல் குழப்ப நிலை குறித்து அவர் கூறிய கருத்து பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வை தூண்டியது. குறிப்பாக தமிழக அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துக்களால் அவரை கைது செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகள் புகார் செய்யும் அளவுக்கு வீரியமாக இருந்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு, தமிழக அரசியலை அடுத்த் தற்போது கமல், ஹைட்ரோகார்பன் என்ற மீத்தேன் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார். தமிழகத்தின் பொன் விளையும் பூமியில் மீத்தேன் வாயுவை எடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இதனை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.
இதுகுறித்து கமல் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும் என்று கூறியுள்லார்
மேலும் ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனங்களின் வெற்றிக்கு பின்னால் இயற்கை அழிவு இருப்பதாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் இதுபோன்ற திட்டம் தவறானது என்றும், தமிழக மக்கள் விழித்து கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார்.
மேலும் இன்றைய மாணவர்கள் விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கு அமைதியான வழியில் போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் மீத்தேன் திட்டத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்த புதுச்சேரி முதல்வருக்கு அவர் பாராட்டும் தெரிவித்தார்.
பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 25, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments