ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய மூன்று முன்னணி நடிகர்கள்

  • IndiaGlitz, [Tuesday,July 09 2019]

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவது என்பது அவ்வளவு எளிதல்லா. எவ்வளவு பெரிய பாடகர்களாக இருந்தாலும் அவர்களிடம் கடுமையாக வேலை வாங்குவார். இதனை பல பாடகர்கள், பாடகிகள் தங்கள் பேட்டியில் கூறியுள்ளனர். அதற்கு ஒரே காரணம், பாடல் மிகவும் நன்றாக வரவேண்டும் என்ற ஒரே காரணம்தான்

அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட பல முன்னணி பாடகர்களே திணறியிருக்கும் நிலையில் மூன்று நடிகர்கள் அவருடைய இசையில் பாடியுள்ளனர். ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். தெனாலி பாடலில் 'இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ என்ற பாடலை கமல்ஹாசனும், சித்ராவும் பாடியிருப்பார்கள். இரண்டாவதாக ரஹ்மான் இசையில் பாடிய நடிகர் சிம்பு. 'காதல் வைரஸ்' என்ற படத்தில் ஒரு பாடலும், அச்சம் என்பது மடமையடா' படத்தில் 'ஷோக்காலி' என்ற பாடலையும் சிம்பு பாடியுள்ளார்.

மூன்றாவது தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிகில்' படத்தில் தளபதி விஜய் பாடியுள்ளார். 'வெறித்தனம்' என்று தொடங்கும் இந்த பாடல் வெளிவந்தவுடன் தான் விஜய்யை ரஹ்மான் எப்படி பயன்படுத்தியுள்ளார் என்பதை பார்க்க வேண்டும்

More News

விஜய்யின் 'பிகில்' படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள், வியாபாரம் மற்றும் புரமோஷன் ஆகியவை ஒரே நேரத்தில் நடந்து வருகிறது

த்ரிஷாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் திட்டம்

த்ரிஷா நடிப்பில் வெளியான '96' மற்றும் 'பேட்ட' ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை', 'பரமபத விளையாட்டு', 'ராங்கி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம் படத்தில் நடிக்க வேண்டுமா? ஒரு அரிய வாய்ப்பு

சீயான் விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் தற்போது 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'மகாவீர் கர்ணன்' ஆகிய படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி: மழை நீடித்தால் என்ன நடக்கும்?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டம் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

காதலில் கவின், கடுப்பில் சாக்சி, கண்டுகொள்ளாத லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டில் சாக்சி உள்பட நான்கு பெண்களை எளிதில் மடக்க முயன்ற கவினால், லாஸ்லியாவிடம் இன்னும் நட்புடன் கூட நெருங்க முடியவில்லை.