close
Choose your channels

ஆகஸ்ட்டில் கமல்ஹாசனின் அடுத்த படம்

Tuesday, May 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன், மகள் ஸ்ருதிஹாசனுடன் முதன்முதலில் நடிக்கவுள்ள 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு வரும் 16ஆம் தேதி முதல் அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த படத்தின் 80% படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும், மீதியுள்ள காட்சிகளின் படப்பிடிப்புகள் இந்தியாவில் வரும் ஜூலை மாதத்துடன் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. கமல் படப்பிடிப்புக்கு செல்லும் முன்பே ஒத்திகை பார்த்துவிட்டு செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளதால் கண்டிப்பாக திட்டமிட்ட காலத்திற்குள் படத்தை முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்தை 'தூங்காவனம்' இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கவுள்ளதாகவும் இதுவொரு ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம், 'உத்தமவில்லன்', தூங்காவனம் ஆகிய மூன்று படங்கள் வெளிவந்த நிலையில் இவ்வருடம் கமல் நடித்த ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment