முதலில் கோரிக்கை வைப்போம். பின்னர் பார்த்துக்கொள்ளலாம்: ரஜினி டுவீட்டுக்கு கமல் பதில்

  • IndiaGlitz, [Wednesday,July 05 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கேளிக்கை வரியை ரத்து செய்து லட்சக்கணக்கான சினிமா தொழிலாளிகளை தமிழக அரசு காக்க வேண்டும் என்று தனது டுவிட்டரின் மூலம் கேட்டுக்கொண்டார். ரஜினியின் இந்த டுவீட் நிச்சயம் முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்களையும் எட்டியிருக்கும். எனவே விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.
இந்த நிலையில் ரஜினியின் இந்த டுவீட்டுக்கு கமல் தன் பாணியில் பதில் அளித்துள்ளார். 'இந்த பிரச்சனைக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி ரஜினி அவர்களே! முதலில் மரியாதையாக நம்முடைய நிலையை அரசிடம் சொல்லுவோம். பின்னர் நம் அடுத்தகட்ட வேலையை தொடங்குவோம்' என்று பதிலளித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு ரஜினியின் வாய்ஸ் மற்றும் விஸ்வரூபம்' பிரச்சனையின் போது கமலின் செல்வாக்கு ஆகியவற்றை இன்றைய அரசியல்வாதிகள் உணர்ந்தவர்கள் தான். தமிழகத்தின் இருபெரும் நடிகர்களான ரஜினியும், கமலும் ஒரு பிரச்சனைக்கு ஒன்றிணைந்து கைகொடுத்தால் அதற்கு எந்த அளவுக்கு வீரியம் இருக்கும் என்பது அரசியல்வாதிகளுக்கு தெரியும். எனவே இந்த பிரச்சனையை விரைவில் தீர்க்க ஆட்சியாளர்கள் முன்வருவார்கள் என்று நம்புவோம்.