ஞானவேல்ராஜா மீது சட்ட நடவடிக்கை: ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை
- IndiaGlitz, [Sunday,September 29 2019]
கமல்ஹாசனுக்கு ரூ.10 கோடி தந்ததாகவும், அந்த பணத்திற்கு தனது நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து தருவதாக கமல்ஹாசன் வாக்களித்திருந்ததாகவும், ஆனால் கமல்ஹாசன் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை, படமும் நடித்து கொடுக்கவில்லை என்றும் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு பொய் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தற்போது மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘கமலுக்கு ரூ.10 கோடி கொடுத்ததற்கான ஆவணங்களை ஞானவேல்ராஜா உடனே சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவருடைய நிறுவனத்திற்கு படம் நடித்து தருவதாக குறிப்பிட்டிருந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் புகாரை திரும்பப்பெற வேண்டும் என்றும், ஆதாரத்தை தர தவறும் பட்சத்தில் ஞானவேல்ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஞானவேல்ராஜா தான் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு உரிய ஆதாரத்தை வெளியிடுவாரா? அல்லது புகாரை வாபஸ் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.