ரஜினியை நேரில் சந்திக்க கமல் முடிவு: ஆதரவு கேட்பாரா?

  • IndiaGlitz, [Wednesday,December 30 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து அவரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு கேட்பேன் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

கமல்ஹாசன் தற்போது 3-வது கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளார் என்பதும் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் தற்போது அவர் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினி தனது அரசியல் முடிவை தெளிவாக கூறியதை அடுத்து அவரது 40 ஆண்டு கால நண்பர் கமல்ஹாசன் ஆதரவு கேட்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது

இந்த நிலையில் புதுக்கோட்டை பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த கம்ல்ஹாசனிடம் இது குறித்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘ரஜினியின் நலனில் அக்கறை கொள்பவர்கள் நானும் ஒருவர் என்றும், சென்னை சென்றதும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதோடு, சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஆதரவு கேட்பேன் என்றும் தெரிவித்தார்

ரஜினியை ஆதரவை பல கட்சிகள் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படும் நிலையில் 40 ஆண்டு கால நண்பர் கமலுக்கு ரஜினி ஆதரவு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்