'இந்தியர்' அடையாளம் போதும், இந்து அடையாளம் வேண்டாம்: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தேர்தல் பிரச்சாரம் சற்றுமுன் முடிவடைந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 'இந்து மதம் என்ற அடையாளம் ஆங்கிலேயர் தந்தது, அது வேண்டாம் இந்தியர் என்ற அடையாளம் போதும்' என்று கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
சீப்பை ஒளித்துவைத்து கல்யாணத்தை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நினைக்கின்றன. மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. ஆழ்வார்களாலோ, நாயன்மார்களாலோ இந்து என்ற குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ 'இந்து' என நாமகரணம் செய்யப்பட்டோம்.
ஆண்டு அனுபவித்து சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்பொழுது மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாக கொள்வது எத்தகைய அறியாமை
நாம் இந்தியர் என்கின்ற அடையாளம் சமீபத்தியதுதான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக, அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.
புரியலன்ற சோமாரிகளுக்கு.... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். கோடின்ன உடனே பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல. அரசியல்வாதிகல் அல்ல, வெறும் வியாதி! தமிழா நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com