திமுகவுக்கு கதை தேவையென்றால் நான் தருகிறேன்: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா டுடே என்ற ஊடகம் நடத்தும் கான்க்ளேவ் என்ற நிகழ்ச்சியில் பல அரசியல்வாதிகள் கடந்த இரண்டு நாட்களாக கலந்து கொண்டு கேள்விகளுக்கு சுவராசியமான பதில்களை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் அவர்கள் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் உங்களுடைய கட்சியும் கூட்டணியும் பாஜகவின் ’பி’ டீம் என்று திமுக குற்றம்சாட்டி வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘திமுகவில் இருந்த மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியரான கருணாநிதி தற்போது உயிருடன் இல்லை. எனவே அவரளவுக்கு வேறு யாராலும் இப்போது உள்ளவர்களால் கதை சொல்ல முடியாது. நான் ஒரு நல்ல வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியர் என்பதால், திமுகவுக்கு கதை தேவை என்றால் நான் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் நகைச்சுவையுடன் கூடிய இந்த பதில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தான் எதிர்ப்பதாகவும், தன்னுடைய அணியை பாஜகவின் ‘பி’ டீம் என்று சொல்வதை ஏற்று கொள்ள முடியாது என்றும், அதுமட்டுமின்றி தன்னுடைய அணி மூன்றாவது அணி இல்லை என்றும், முதல் அணி என்றும் ஏற்கனவே கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன பாஜகவின் பிடீம்னு சொல்ற திமுகாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் கருணாநிதி இப்ப இல்ல, அவங்க எதாவது கதை அடிச்சிவிடனும்னு ஆசைப்பட்டா நான் சொல்றன் சிறந்த கதையா அவங்களுக்கு ஏன்னா நானும் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் தான் - #கமல்ஹாசன்???? pic.twitter.com/WEsxwcNMnH
— SundaR KamaL (@Kamaladdict7) March 14, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments