close
Choose your channels

'சபாஷ் நாயுடு' இயக்குனர் மாற்றமா?

Friday, June 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை 'சாணக்யன்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ்மேனன் இயக்கி வருகிறார் என்பது அனைவரும் தெரிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தில் நேற்று ஸ்ருதிஹாசன் நடனம் ஆடும் பாடல் ஒன்றை படமாக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் இயக்குனர் உடல்நலமின்றி இருந்ததால் இந்த பாடலை கமல்ஹாசனே இயக்கியதாவும் கூறப்படுகிறது. இயக்குனர் உடல்நலம் தேறியவுடன் மீண்டும் இயக்குனர் பணியை தொடர்வார் என்றும் அதுவரை ஒருசில காட்சிகளை மட்டுமே கமல்ஹாசன் இயக்குவார் என்றும் மற்றபடி இந்த படத்தின் இயக்குனரில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், பிரம்மானந்தம், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கின்றார். லைகா புரடொக்ஷன்ஸ் மற்றும் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment