ஒரு நல்ல படம் எடுக்க இத்தனை லட்சம் போதும்.. மாயாவுக்கு கமல்ஹாசன் கூறிய அறிவுரை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று கமல்ஹாசன் எபிசோடு என்பதால் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர் என்பதும் குறிப்பாக சினிமா குறித்து அவர் பேசிய சில கருத்துக்கள் இளம் தலைமுறை சினிமா நட்சத்திரங்களுக்கும், படைப்பாளிகளுக்கும் ஒரு பெரிய அறிவுரையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய எபிசோடில் மாயா தான் ஒரு கதை எழுதிக் கொண்டு இருப்பதாகவும் அதை இயக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் கூறினார். அப்போது ’சினிமா என்பது பிரம்மாண்டமான சினிமா மட்டும் கிடையாது, சின்ன படங்கள் தான் சினிமாவை நீண்ட காலத்திற்கு தூக்கி நிறுத்தும். 100 கோடி, 500 கோடி என்று பட்ஜெட்டில் படம் எடுக்கும் படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சின்ன பட்ஜெட் படங்கள் தான் சினிமாவை காப்பாற்றும் என்று தெரிவித்தார்.
தற்போது சமூக வலைதளத்தில் இருந்து வரும் படைப்பாளிகள் மிக குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து வருகிறார்கள் என்றும், ஒரு படம் எடுக்க குறைந்தபட்சம் 10 லட்சம் முதல் 40 லட்சம் வரை போதும் என்றும் கோடி கணக்கில் தேவையில்லை என்று தெரிவித்தார். எனவே நீங்கள் உங்கள் சினிமா ஆசையை நிறைவேற்ற கடுமையாக உழைத்தால் உங்கள் ஆசை நிறைவேறும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
மேலும் ’என்ன எனக்கு நானே ஆப்பு வைத்துக் கொண்டு வருகிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம், நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் என்னை பல சின்ன படங்கள் தான் காப்பாற்றியது’ என்றும் அவர் தெரிவித்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு சினிமா ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout