அதிகம் எதிர்பார்த்தேன், ஆனால் டார்ச்சுக்கே இன்றுதான் வருகிறார்: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Friday,April 03 2020]
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களிடம் பேசியபோது வரும் ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு அகல்விளக்கு, டார்ச் லைட், மொபைல் டார்ச் ஆகியவற்றை ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் பிரதமரின் இந்த வேண்டுகோள் குறித்து நெட்டிசன்கள் முதல் அரசியல் தலைவர்கள் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஒருசிலர் பிரதமரின் இந்த வேண்டுகோளை ஆதரித்தும் வந்தனர்.
இந்த நிலையில் பிரதமரின் இந்த பேச்சு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.
பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 3, 2020