ரஜினியுடன் கூட்டணி வைத்தால் யார் முதல்வர் வேட்பாளர்? கமல்ஹாசன் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தனிக்கட்சி தொடங்கி தேர்தல் களத்தில் குதிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினிகாந்த் விரைவில் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்பதும் கமல்ஹாசன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கட்சி ஆரம்பித்து தற்போது தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய பிரச்சாரத்தின் இடையே ரஜினியுடன் கூட்டு சேர தயார் என்றும் இதற்காக இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் மக்களுக்கு நல்லது என்றால் ஈகோவை விட்டுவிட்டு ரஜினியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் இந்தநிலையில் நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’ரஜினியுடன் கூட்டணி என்றால் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்விக்கு பதில் கூறிய கமல்ஹாசன் ’ரஜினியுடன் கூட்டணி அமைத்தால், ரஜினி கேட்டுக்கொண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தான் தயார்’ என்றும் அவர் கூறினார்
மேலும் தான் பகுத்தறிவாளன் என்றும் ரஜினி உள்பட யாரோடும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வரும் தேர்தலில் ரஜினி கமல் கூட்டணி அமையுமா? அப்படியே கூட்டணி அமைந்தாலும் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments