நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேன். கமல் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,December 22 2018]

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த கமல்ஹாசன், 'வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கமல், நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதி என்றார்.

மேலும் ஒத்த கருத்துக்கள் உடைய கட்சிகளுடன் கூட்டணி என்றும், தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் வழக்கம் போல் புரியாத கருத்து ஒன்றையும் தெரிவித்தார்.

மேலும் இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை நிறுத்தும் என்றும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதுதொடர்பாக தானும் அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்

கமல்ஹாசன் தான் அடுத்த முதல்வர் என அவருடைய கட்சியினர்களும் ரசிகர்களும் கூறிக்கொண்டு வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கமல் முடிவு செய்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

 

More News

தனுஷின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

கமல்ஹாசன் கட்சியில் இணைந்த பிரபல இயக்குனர்

கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியான 'மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இந்த கட்சியில் திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலர் இணைவார்கள்

ரஜினியுடன் முதல்முறையாக இணையும் ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற்று வரும் பொங்கல் தினத்தில் வெளியாக தயார் நிலையில் உள்ளது.

'பங்கு' பக்கத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே! 'கனா' படம் குறித்து சூரி

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த 'கனா' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகிறது.

இளையராஜா மீது தயாரிப்பாளர்கள் வழக்கு

தனது பாடல்களை பொது நிகழ்ச்சிகளில், மேடைகளில் பாடுபவர்கள் தனக்கு ராயல்டி தரவேண்டும் என்று இளையராஜா கூறி வருவது தெரிந்ததே.