ரஜினியுடன் இணைந்து அரசியல் பயணம் சாத்தியமா? கமல் பதில்

  • IndiaGlitz, [Sunday,November 12 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் உள்ளார். வரும் ஜனவரி முதல் ஒவ்வொரு செய்தியாக வரும் என்று அவர் ஏற்கனவே கூறியுள்ளதால் அவருடைய கட்சி அடுத்த ஆண்டு உதயமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது,  'ரஜினியுடன் அரசியல் பாதையில் பயணிப்பீர்களா?' என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது: 'ரஜினியின் தத்துவமும் என்னுடைய தத்துவமும் ஒன்றாக இருக்கும் என சொல்வதற்கில்லை. எங்கள் அரசியல் அறிக்கை ஒன்றாக இருக்கும்பட்சத்தில் இணைந்து வேலை செய்யலாம். இந்தியாவில் 2000 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. நான் ஒரு புதிய கட்சியைத் தொடங்க உள்ளேன். ரஜினியும் ஒரு புதிய கட்சியைத் தொடங்க உள்ளார் என்றால், அவருக்கு வாழ்த்துகள்' என்று கூறினார்.  

ரஜினிகாந்த் அடிப்படையில் ஆன்மீகவாதி, கமல்ஹாசன் பகுத்தறிவாதி. இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், கொள்கை அளவில் வேறுபட்டவர்கள். இருப்பினும் தமிழக மக்களை ஊழலில் இருந்து காப்பாற்ற இருவரும் இணைய வேண்டும் என்பதே பெரும்பாலானோர்களின் விருப்பமாக உள்ளது.                                                           

More News

சிங்கம் குகையில் இல்லாத போது அரசியல் செய்கிறார் கமல்: சரத்குமார்

உலக நாயகன் கமல்ஹாசன் இனிமேலும் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வியை எழுப்ப அவசியமில்லாத வகையில் விறுவிறுப்பாக அரசியல் பணியை படிப்படியாக செய்து வருகிறார்.

அந்தப் பாடலை நான் எழுதவில்லை. இசையமைக்கவில்லை. சிம்பு

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சிம்பு பாடிய பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வைரலானது. ’தட்ரோம் தூக்குறோம்’ என்று தொடங்கும்

இன்றிரவு முதல் சென்னையில் மழை வெளுத்து வாங்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் மழை குறித்து பதிவு செய்திருக்கும் முக்கிய தகவல் இதுதான்:

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து தினகரன் முக்கிய அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ உரிய நேரத்தில் தேவைப்பட்டால் வெளியிடப்படும் என சசிகலாவின் உறவினர்கள் கூறி வந்தனர்.

பிக்பாஸ் நடிகருக்கு மலையாள திரையுலகில் கிடைத்த வாய்ப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.