ரஜினியுடன் இணைந்து அரசியல் பயணம் சாத்தியமா? கமல் பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் உள்ளார். வரும் ஜனவரி முதல் ஒவ்வொரு செய்தியாக வரும் என்று அவர் ஏற்கனவே கூறியுள்ளதால் அவருடைய கட்சி அடுத்த ஆண்டு உதயமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, `ரஜினியுடன் அரசியல் பாதையில் பயணிப்பீர்களா?' என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது: 'ரஜினியின் தத்துவமும் என்னுடைய தத்துவமும் ஒன்றாக இருக்கும் என சொல்வதற்கில்லை. எங்கள் அரசியல் அறிக்கை ஒன்றாக இருக்கும்பட்சத்தில் இணைந்து வேலை செய்யலாம். இந்தியாவில் 2000 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. நான் ஒரு புதிய கட்சியைத் தொடங்க உள்ளேன். ரஜினியும் ஒரு புதிய கட்சியைத் தொடங்க உள்ளார் என்றால், அவருக்கு வாழ்த்துகள்' என்று கூறினார்.
ரஜினிகாந்த் அடிப்படையில் ஆன்மீகவாதி, கமல்ஹாசன் பகுத்தறிவாதி. இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், கொள்கை அளவில் வேறுபட்டவர்கள். இருப்பினும் தமிழக மக்களை ஊழலில் இருந்து காப்பாற்ற இருவரும் இணைய வேண்டும் என்பதே பெரும்பாலானோர்களின் விருப்பமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout