ரஜினி, விஜய் நிவாரண உதவி குறித்து கருத்து கூறிய கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,November 24 2018]

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இந்த பேட்டியில் ஒரு கேள்வியாக 'கடந்த காலங்களில் இயற்கை பேரிடர் நேரும் போதெல்லாம், திரையுலக பிரபலங்கள், அரசின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது ரஜினிகாந்த், விஜய் போன்றோர் தங்களது ரசிகர் மன்றத்தின் மூலம் நேரிடையாக பொதுமக்களுக்கு நிவாரண உதவி செய்கின்றனர். இதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்வி கமலிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், 'சந்தேகம் வலுத்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது. நாம் கொடுக்கும் பணம் தேவைப்பட்டோர்களுக்கு போய்ச்சேருமா? என்ற அவநம்பிக்கை வந்துவிட்டது என்பதை உறுதி செய்கிறது. இந்த நேரத்திலாவது அரசியல்வாதிகள் ஊழல் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.

More News

கமல் இன்னும் களத்தூர் கண்ணாம்மா குழந்தையாகவே இருக்கின்றார்: அமைச்சர் ஜெயகுமார்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய கமல்ஹாசனுக்கும் ஆளும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருப்பது தெரிந்ததே

டெல்டா விவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்ய வேண்டும்: பிரபல இயக்குனர் கோரிக்கை

சமீபத்தில் கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு சென்ற நிலையில் நிவாரண பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும்

இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடி வீரன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா கடந்த சில மாதங்களாக 'தேவராட்டம்' என்ற படத்தை இயக்கி வந்தார்.

'மாரி 2'வை அடுத்து ரிலீசுக்கு தயாரான தனுஷ் படம்

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் புரமோஷனும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

'பேட்ட' இசை வெளீயீடு: முக்கியமானதை மறந்த கார்த்திக் சுப்புராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' வரும் 29ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் ஒன்றரை மாத இடைவெளியில் அவர் நடித்துள்ள இன்னொரு படமான 'பேட்ட' வரும் பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ளது.