கவுதமி சம்பள பாக்கி குறித்து கமல் கருத்து
- IndiaGlitz, [Tuesday,February 27 2018]
கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், அதற்கான சம்பளத்தை கமல்ஹாசனின் நிறுவனம் தனக்கு தரவில்லை என்றும் சமீபத்தில் நடிகை கவுதமி புகார் கூறியிருந்தார்.
இந்த புகாருக்கு ஏற்கனவே ராஜ்கமல் நிறுவனம் பதிலளித்துவிட்ட நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இதுகுறித்து கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், 'கவுதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் கம்பெனியில் அதிகாரிகள் உள்ளனர், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று பதிலளித்தார்.
மேலும் விழுப்புரம் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவன் படுகொலை சம்பவம் குறித்த கேள்விக்கு தமிழக அரசு தேவையான நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சண்டிகரில் மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் குறித்த கேள்விக்கு மாணவர்களுக்குப் பாதுகாப்பின்மை என்பது இருக்கக்கூடாது.
இங்கு பல மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் சௌகர்யமாக படித்து செல்கின்றனர். அதே போல பிற மாகாணத்திலும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும். இந்தியாவில் எந்த மாகாணத்திலும் பாதுகாப்பு இருக்க வேண்டும் இல்லை என்றால் நாடு நல்ல நாடல்ல” என்றும் கூறினார்.
மேலும் ஐஐடியில் சமஸ்கிருத பக்தி பாடல் பாடப்பட்ட சர்ச்சை குறித்த கேள்விக்கு 'தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் பாட வேண்டும் என்பதே தன்னுடைய கருத்து என்றும் கமல்ஹாசன் கூறினார்.