சிறுவனின் செயலை காப்பியடிக்கலாமா? ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்த கமல்

  • IndiaGlitz, [Monday,February 18 2019]

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, ரஜினியை மறைமுகமாக தாக்கிய அவர் திமுக தலைவர் ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்துள்ளார்.

கிராமசபை என்ற ஒரு அமைப்பு பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் தற்போது அரசியலில் புதியதாக நுழைந்துள்ள தான் கிராம சபையை நடத்தி வருவதை பார்த்து காப்பி அடிக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சட்டசபைக்கு நான் சென்றால் சட்டையை கிழித்து கொண்டு வெளியே வரமாட்டேன் என்றும், ஒருவேளை சட்டை கிழிந்தாலும் வேறு சட்டை அணிந்து கொண்டு தான் வெளியே வருவேன் என்றும் கமல் கூறினார். மேலும் திமுகவை தான் விமர்சனம் செய்வதற்கு காரணம் அவர்களேதான் என்றும், கூட்டணியில் இணையவில்லை என்பதற்காக தான் விமர்சனம் செய்யவில்லை என்றும் கூறினார்.

 

More News

கோதாவில் இறங்கிவிட்டு பின்வாங்கலாமா? ரஜினிக்கு கமல் மறைமுக தாக்குதல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், தனது ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு

பாகிஸ்தானுக்கு பகிரங்க ஆதரவு கொடுக்கின்றதா சவுதி அரேபியா?

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு சமீபத்தில் காஷ்மீர் புலவாமா பகுதியில் நடத்திய கொடூர தாக்குதலுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

காஷ்மீர் தாக்குதல் விவகாரம்: நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா

சமீபத்தில் காஷ்மீர் மாநில புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவின் சாதாரண குடிமகன் முதல் பிரபலமானவர்கள் வரை

ஜி.வி.பிரகாஷூக்கு கிடைத்த இரண்டாவது பட்டம்

நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திரைத்துறையில் ஜொலிப்பது போலவே சமூக சேவைகளிலும் ஈடுபட்டு, பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருபவர்

கமல்ஹாசனுக்கு தக்க பதிலடி தரப்படும்: உதயநிதி ஸ்டாலின்

கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், திமுக,அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளையும் ஆரம்பம் முதலே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.