சின்மயி-வைரமுத்து விவகாரம்: கருத்து சொன்ன கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி கடந்த சில நாட்களாக பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். சின்மயியை தொடர்ந்து மேலும் ஒருசிலர் வைரமுத்து மீது கூறும் குற்றச்சாட்டுக்களையும் சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
சின்மயி-வைரமுத்து விவகாரம் கிட்டத்தட்ட நான்கு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சின்மயிக்கு ஆதரவாக ஒருசில நடிகைகள் களமிறங்கியிருந்தாலும் பெரிய நடிகர்களும், வைரமுத்துவுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளும் இதுவரை இதுகுறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமால் மெளனமாக இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் வைரமுத்துவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் உலக நாயகனுமான கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் சின்மயி-வைரமுத்து பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'நியாயமான முறையில் "மீ டூ" குறையை சொல்ல வேண்டும்' என்று கூறியுள்ளார்.
சின்மயி, வைரமுத்து ஆகிய இருவருக்கும் ஆதரவாகவும் இல்லாமல் எதிர்ப்பாகவும் இல்லாமல் பொதுவான கருத்தை கமல்ஹாசன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout