கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Thursday,May 19 2016]
உலக நாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து தற்போது இந்த படத்திற்கான பாடல்கள் கம்போஸிங் பணியில் இசைஞானி ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் 'சபாஷ் நாயுடு' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் பக்காவாக திட்டமிட்டு இறங்கும் உலகநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு படத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை ராஜீவ்குமார் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றன.