close
Choose your channels

பச்சோந்தி ஜூலியின் தோலை உரித்த கமல்

Saturday, July 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஜூலி பங்கேற்கிறார் என்றவுடன் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. ஜல்லிக்கட்டு வீராங்கனைக்கு சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய வாழ்த்துக்களை தெரிவித்தது. ஆனால் அதெல்லாம் ஒரே ஒரு வாரம் தான்.

ஒரே வாரத்தில் ஜூலியின் உண்மையான முகம் தெரிய ஆரம்பித்தவுடன் ஜல்லிக்கட்டில் சேர்த்து வைத்த புகழை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார். கடந்த இரண்டு நாட்களில் மிக அதிக நபர்களால் வெறுக்கப்படும் ஒரு நபராக ஜூலி மாறிவிட்டதாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜூலி வயிற்றுவலியால் துடித்தபோது (உண்மையா? நடிப்பா? என்பது வேறு விஷயம்) பங்கேற்பாளர்கள் பாதிபேர் ஜூலி நடிப்பதாகவே கருதினர். ஆனால் ஓவியா ஒருவர் மட்டுமே ஜூலியை ஆறுதல் கூறினார். ஆனால் ஜூலி தனக்கு ஆறுதல் கூறியவர் என்ற நன்றி கூட இல்லாமல் ஓவியாவை பற்றி காயத்ரியிடம் புறம் கூறியதை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால்கூட ஜீரணிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் 'ஓவியாவிடம் ஜூலி பேசியதையும், காயத்ரியிடம் ஜூலி பேசியதையும் கமல் போட்டு காட்டுவதாக வெளிவந்துள்ளது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான ஓவியா, 'ஜூலி...நம்பிக்கை துரோகம்' என்று கூறினார். தனக்கு துரோகம் செய்தவரை கூட சிரித்து கொண்டே அவர் எதிர்கொண்ட விதம் அப்படியே சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைலில் ருந்தது. ஓவியாவின் இந்த ஸ்டைல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியதால் கரகோஷம் விண்ணை பிளந்தது. உடனே ஓவியா பார்வையாளர்களை நோக்கி பிளையிங் கிஸ் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment