கட்சி தொடங்க பணம்: கமல்ஹாசனின் அதிரடி உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சி தொடங்குவது உறுதி என்ற நிலையில் தனது கட்சிக்கு பொதுமக்களே நிதி தருவார்கள் என்றும் முதல்கட்டமாக ரூ.30 கோடி நிதி வசூலிக்க முடிவு செய்துள்ளதாகவும் கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று அவரது நற்பணி இயக்கத்தினர் பணத்தை வசூல் செய்ய தொடங்கினர். மேலும் பொதுமக்கள் பலரும் கமல்ஹாசனுக்கு நேரடியாக பணத்தை அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அதிகாரபூர்வமாக கட்சி தொடங்குவதற்கு முன்பே நிதியுதவி பெறுவது சட்டவிரோதம் என்பதால் உடனடியாக அனைத்து பணத்தையும் திருப்பி அளிக்க கமல் தனது நற்பணி இயக்கத்தார்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள் என்று நான் சொன்னதை “ரசிகர்கள் கொடுப்பார்கள்” என்று ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எனவே எனது நற்பணி மன்ற நிர்வாகிகளும், மக்களும் குழம்பி விடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்.
எனக்கு கடிதங்கள், பணம் வரத் தொடங்கி விட்டது. ஆனால் நான் இப்போது பணம் வாங்கினால், அது சட்ட விரோதமாகிவிடும். அதை நான் விரும்பவில்லை. எனக்கு வந்துள்ள பணத்தை நான் வெறுமனே சும்மாவும் வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆகையால் அந்த பணத்தை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
எனது இந்த செயலால் நான் பணத்தை வாங்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. முன் வைத்த காலை பின் வைத்து விட்டேன் என்றும் அர்த்தம் இல்லை. கட்சித் தொடங்குவதற்கான சரியான கட்டமைப்பு இல்லாமல் அந்த பணத்தைத் தொடக்கூடாது.
இப்போதைக்கு அந்த பணத்தை என்னுடைய பணம் என்று நினைத்து நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதற்குள் நீங்கள் அந்த பணத்தைத் செலவு செய்து விட்டால், அதற்கான பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்.
நீங்கள் பணம் அனுப்பிய அன்றே கட்சி உருவாகி விட்டது. ஆனால் கட்ட மைப்பு சரியாக இருக்க வேண்டும். இப்போது சில இயக்கங்களில் நடக்கும் குளறு படிகள் போல நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பணத்தை திருப்பி அனுப்புகிறேன்' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com