பிரதமர் மோடிக்கு டேக் செய்துவிட்டால் போச்சு: கமல்ஹாசன் பதில்!

பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு வைத்து கமல்ஹாசன் பதிவுசெய்த டுவிட்டில் பிரதமர் டுவிட்டர் அக்கவுண்ட்டை டேக் செய்யாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது பிரதமருக்கு டேக் செய்துவிட்டால் போச்சு என்று அவர் பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்த டுவிட் ஒன்றை பதிவு செய்தார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது: சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே.... என்று பதிவு செய்திருந்தார்.

இந்த டுவிட்டில் அவர் பிரதமர் உள்பட யாருடைய டுவிட்டர் அக்கவுண்டையும் டேக் செய்யவில்லை. இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது, பிரதமருக்கு கேள்வி எழுப்பி டுவிட் செய்த நீங்கள் பிரதமருக்கு ஏன் டேக் செய்யவில்லை என்ற கேள்விக்கு ‘டேக் செய்து விட்டால் போச்சு என்று அவர் கூறினார்.

More News

'அண்ணாத்த' படப்பிடிப்பு: சன்பிக்சர்ஸ் வெயிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது.

'தி டர்ட்டி பிக்சர்ஸ்' நடிகையின் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்: போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சொல்வது என்ன? 

பிரபல பாலிவுட் மற்றும் வங்காள மொழி நடிகை ஆர்யா பானர்ஜி திடீரென மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இவரது மரணம் கொலையா? அல்லது தற்கொலையா?

கடற்கரைக்கு சென்ற கள்ளக்காதல் ஜோடி பரிதாப பலி! சென்னையில் பரபரப்பு!

கோவளம் கடற்கரைக்கு ஜாலியாக சென்ற கள்ளக்காதல் ஜோடி பரிதாபமாக பலியான சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிறந்த நாளன்று எளியோர்களுக்கு பிரியாணி விருந்தளித்த தமிழ் நடிகை!

கோலிவுட் திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகள் பலர் தங்களுடைய பிறந்த நாளை வெளிநாட்டிலும் ஸ்டார் ஓட்டல்களிலும் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

ரியோவின் முகத்திரையை கிழித்த கமல்ஹாசன்: குறும்படம் உண்டா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பு குரூப்ப்பின் எல்லை மீறலை அவ்வப்போது நெட்டிசன்கள் குறும்படமாக போட்டு வெட்ட வெளிச்சமாக்கி வந்தார்கள் என்பது அறிந்ததே.