இவர்கள் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஏழை எளியவர்கள் வீட்டில் முடங்கி கிடப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்படும் நபர்களுக்கு ரேஷனில் விலையில்லா பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 உள்பட பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்வதாக அறித்துள்ளது.
இந்த நிலையில் உதவி பெறும் நபர்களின் பட்டியலில் நாட்டுப்புறக் கலைஞர்கள், இசைக்குழுவினர்களையும் இணைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள். அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில், அவர்களும் கவலையின்றி பசியாறுவர்.
தமிழகத்தில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள்.அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில்,அவர்களும் கவலையின்றி பசியாறுவர்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 28, 2020