இவர்கள் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஏழை எளியவர்கள் வீட்டில் முடங்கி கிடப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்படும் நபர்களுக்கு ரேஷனில் விலையில்லா பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 உள்பட பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்வதாக அறித்துள்ளது.

இந்த நிலையில் உதவி பெறும் நபர்களின் பட்டியலில் நாட்டுப்புறக் கலைஞர்கள், இசைக்குழுவினர்களையும் இணைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள். அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில், அவர்களும் கவலையின்றி பசியாறுவர்.

More News

கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடல்களை எவ்வாறு கையாள்வது???

கொரோனா வைரஸ் உலகிற்கே புதிய நோயாக இருப்பதால் வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்பவர்களை

கொரோனா வைரஸில் இருந்து முருகப்பெருமான் காப்பாற்றுவார்: யோகிபாபு

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை திரையுலகைச் சேர்ந்த பலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ரூ.500 கோடி கொடுக்கும் டாடா!

உலகெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நிலையில் இந்த வைரஸிலிருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றன.

வெளிநாட்டுப் பயணிகளை சோதனையிடுவதில் ஏற்பட்ட குறைபாடே கொரோனா பரவலுக்கு காரணம்!!! ராஜீவ் கவுபே கருத்து!!!

வெளிநாடுகளில் இருந்துவந்த பயணிகளைச் சோதனையிடுவதில் ஏற்பட்ட குறைபாடே இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை அதிகமாகியிருப்பதற்கு காரணம் என்று மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபே தெரிவித்துள்ளார்.

குமரியில் மூவர் உயிரிழந்தது எதனால்? சுகாதாரத்துறை விளக்கம்

கன்னியாகுமரி கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 2 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூவர் உயிரிழந்தது