பிரதமருக்கு கமல் வீடியோ மூலம் விடுத்த கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் வீடியோ வடிவில் பிரதமர் மோடிக்கு இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
ஐயா வணக்கம், என் பெயர் கமல்ஹாசன், நான் உங்கள் குடிமகன். இது மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பிய ஒரு திறந்த வீடியோ. தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாதது அல்ல. தமிழக மக்கள் நீதிக்காக போராடி கொண்டிருக்கின்றார்கள். நீதி வழங்கப்பட்டாகிவிட்டது. ஆனால் செயல்படுத்தப்பட வேண்டியது உங்கள் கடமை. பாமரர்களும் பண்டிதர்களும் இந்த காலதாமதம் கர்நாடக தேர்தலுக்காகத்தான் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். அது ஆபத்தானது, அவமானகரமானதும் கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆகவேண்டும். அது உங்கள் கடமை , நினைவுபடுத்த வேண்டியது என் உரிமை. இங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடித வடிவில் உங்களுக்கு அனுப்புகின்றேன். தயவுசெய்து செயல்படுங்கள். இந்நிலை மாற வழிசெய்யுங்கள். வாழ்க இந்தியா
இவ்வாறு கமல்ஹாசன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
#KamalAppealToPM #NarendraModi #CauveryWaterManagement @ikamalhaasan @maiamofficial pic.twitter.com/HXj702XSQ7
— IndiaGlitz - Tamil (@igtamil) April 12, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com