நாளை நமதே, நிச்சயம் நமதே. கமல் வெளியிட்ட சூளுரை ஆடியோ

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

உலகநாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இன்று காலை அவர் தனது முதல் பயணத்திற்கு 'நாளை நமதே' என்ற பெயரை வைத்தார். இந்த நிலையில் இதே பெயரில் தற்போது ஆடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால் நாளை நமதே.
பார்த்ததைப் பயின்றதைப் பழகி நடந்தால் நாளை நமதே
நிலமும் நீரும் பொதுவெனப் புரிந்தால் நாளை நமதே
எனக்கே எனக்கு என்று முந்தாதிருந்தால் நாளை நமதே
மூத்தோர் கடனை இளையோர் செய்தால் நாளை நமதே
அனைவரும் கூடி தேரை இழுத்தால் நாளை நமதே
சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால் நாளை நமதே
முனைபவர் கூட்டம் பெருகிவிட்டால் நாளை என்பது நமதே, நமதே
கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே, நிச்சயம் நமதே
தமிழர், தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே, நிச்சயம் நமதே..

இந்த ஆடியோவுடன் கூடிய வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

More News

தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்த விருது: பத்மவிபூஷன் குறித்து இளையராஜா

இளையராஜா அவர்களுக்கு 2017ஆம் ஆண்டிற்கான பத்மவிபூஷன் விருது சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இசைஞானிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

GST ரிலீசுக்கு முந்தைய நாளில் ராம்கோபால்வர்மா மீது வழக்குப்பதிவு!

GST என்று கூறப்படும் 'God Sex and Truth' என்ற வெப் திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். இந்த படம் நாளை காலை 9 மணிக்கு இணையதளத்தில் வெளியாகவுள்ளது.

சசிகுமார்-சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2' டெக்னீஷியன்கள் அறிவிப்பு

கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

எது கண்ட இடம்? கமல்ஹாசனுக்கு சீமான் கேள்வி

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தியானம் செய்தது குறித்து கமல் இன்று கூறியபோது, 'இதற்குத்தான் கண்ட இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க வேண்டாம் என்று கூறினேன்.

கைதிகளுக்கும் மனைவியுடன் உறவு கொள்ள உரிமை: ஆயுள் கைதிக்கு 2 வாரம் விடுமுறை அளித்த நீதிமன்றம்

கைதிகள் என்று முத்திரை குத்தப்பட்டாலும் அவர்களும் மனிதர்களே! சிறைக்கு செல்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியேற வேண்டும் என்பதே சிறைகள் அமைக்கப்பட்டதன் நோக்கம்.