ஸ்ருதிஹாசனை அடுத்து அக்சராஹாசனுக்கு உதவும் கமல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் ஏற்கனவே அமிதாப், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’, அஜித் நடித்த ‘விவேகம்’, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்று செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பழம்பெரும் பாடகி உஷா உதுப் நடித்து வருகிறார்.
அக்சராஹாசனின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தை இயக்குனர் ராஜாகிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசரை அக்சராஹாசனின் சகோதரி நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டார் என்பதும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலரை அக்சராஹாசனின் தந்தையும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன் வரும் 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
This feels like a dream come true! The one & only Dr. @ikamalhaasan will be launching the trailer of #AMNP on Oct.12th @ 5pm! @kaiyavecha @Iaksharahaasan @amnp_thefilm @trendmusicsouth @DoneChannel1
— TrendLoud (@Trendloud) October 9, 2020
#AMNPTrailer #TrendLoudOriginalFilm #KamalHaasan #AksharaHaasan https://t.co/zYEqBKyCCF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com