தொழிலாளர் தினத்தில் கமல் வெளியிட்ட சின்னம்: இணையத்தில் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன் காலையிலேயே தொழிலாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு டுவிட்டை பதிவு செய்தார் என்று பார்த்தோம். நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைத்திடும் ஒவ்வொரு தொழிலாளியின், தனி பொருளாதாரமும் பலப்பட வாழ்த்துகிறேன். உழைப்பை மூலதனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம், தடைபடாது. இந்நிலை மாறும், தொழிலாளர் வாழ்வு ஏற்றம் பெறும். நம்பிக்கையுடன்.. கமல்ஹாசனின் இந்த டுவீட் காலை முதல் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் அணியின் சின்னத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘நம்முலகை கட்டமைத்திடும் தொழிலாளர்கள் கொண்டாடும் தொழிலாளர் தினத்தன்று, ”மக்கள் நீதி மய்யம் கட்சியின் “தொழிலாளர் அணியின் சின்னத்தை” வெளியிடுவதில் பெருமகிழ்வடைகிறோம். உழைப்பை அங்கீகரிப்போம்! தொழிலாளர்களை கொண்டாடுவோம்! என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த டுவீட் கடந்த சில நிமிடங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் இந்த சின்னத்தை மிக வேகமாக பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நம்முலகை கட்டமைத்திடும் தொழிலாளர்கள் கொண்டாடும் தொழிலாளர் தினத்தன்று,
— Kamal Haasan (@ikamalhaasan) May 1, 2020
”மக்கள் நீதி மய்யத்தின்” @maiamofficial கட்சியின் “தொழிலாளர் அணியின் சின்னத்தை” வெளியிடுவதில் பெருமகிழ்வடைகிறோம்.
உழைப்பை
அங்கீகரிப்போம்!தொழிலாளர்களை கொண்டாடுவோம்! pic.twitter.com/BCjVQtWZNA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments