தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாள்: ரஜினி, கமல், விஜய் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்களிலும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி உட்பட பல அரசியல்வாதிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் உள்பட பல திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தொலைபேசியில் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
சமூக நீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், திரு முக ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.
தளபதி விஜய்யும் தளபதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் முதல்வருக்கு கூறி உள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், திரு @mkstalin அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். @CMOTamilnadu pic.twitter.com/QKF8hyRI2M
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) March 1, 2024
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments