நடிகர் கிருஷ்ணா மறைவு: கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி இரங்கல்

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன்: தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த கிருஷ்ணா மறைந்துவிட்டார். அவருக்கு என் அஞ்சலி. அன்னை, சகோதரர், தந்தை என அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து துக்கத்தில் வாடும் தம்பி மகேஷ்பாபு துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ரஜினிகாந்த்: கிருஷ்ணா அவர்களின் மறைவு தெலுங்குத் திரையுலகிற்கு ஒரு பெரிய இழப்பு... அவருடன் 3 படங்களில் நடித்தது நான் எப்போதும் போற்றும் நினைவுகள். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

சூர்யா: கிருஷ்ணா அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். சகோதரர் மகேஷ்பாபு மற்றும் அவருடைய குடும்பத்தினர்களுக்கு இது கடினமான ஆண்டு.. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்!

கார்த்தி: கிருஷ்ணா அவர்கள் பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். அவர் என்றென்றும் நம் இதயங்களில் நிலைத்திருப்பார். அவர் ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்த சூப்பர் ஸ்டார். மகேஷ்பாபு அண்ணா தயவுசெய்து வலுவாக இருங்கள், இது மிகவும் கடினமான ஆண்டு.

சிம்ரன்: கிருஷ்ணா அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. மகேஷ்பாபுவின் மன வலிமைக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

ராதிகா: சூப்பர் ஸ்டார் என்ற மாபெரும் முத்திரையை பதித்த கிருஷ்ணா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.