கமல்-ரஜினி பாணியை கடைபிடிக்கும் சல்மான்கான்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னால் ரிகர்சல் செய்ய வேண்டும் என்ற வழக்கம் எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த பழைய படங்களின் படப்பிடிப்பின்போது இருந்தது. ஆனால் சமீபகாலமாக ரிகர்சல் வழக்கம் காணாமல் போய், நேரடியாக படப்பிடிப்பிற்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் இந்த ரிகர்சல் வழக்கத்தை மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் தனது உத்தமவில்லன்' படத்தின் மூலம் கொண்டு வந்தார். அதேபோல், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்திலும் ரிகர்சலுக்காக ரஜினி சமீபத்தில் வந்தார் என்ற செய்தியை பார்த்தோம்.
எனவே கமல், ரஜினி கடைபிடித்து வரும் ரிகர்சல் பாணியை சல்மான்கான் விரைவில் நடிக்கவுள்ள சுல்தான்' படத்தில் கடைபிடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 'சுல்தான்' படத்தில் பாக்ஸாராக நடிக்கும் சல்மான்கான், தற்காப்பு கலைக்காக படப்பிடிப்பிற்கு முன்னர் இரண்டு மாதங்கள் பயிற்சி எடுக்க உள்ளதாகவும், அதன்பின்னர் படக்குழுவினர்களுடன் பாக்ஸிங் ரிகர்சல் காட்சியில் நடித்தபின்னர் படப்பிடிப்புக்கு செல்ல முடிவு எடுத்துள்ளதாக பாலிவுட்டில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout