அவரை என் தாயாக பெற்றதில் நான் பெருமை அடைகிறேன்: கமல், ரஜினி நாயகியின் மகள் நெகிழ்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர்களுடன் நடித்த நடிகையின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர்தான் நடிகை கௌதமியின் மகள் சுப்பு.
நடிகை கௌதமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கௌதமியின் மகள் சுப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுக்கு நிகழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது நார்த் ஸ்டார், என் ரோல் மாடல், என் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் எப்போதும் மிகுந்த பலம், நேர்மை மற்றும் கண்ணியம் கொண்டவர். உலகம் கொடூரமாக இருக்கும் போது அவர் மிகுந்த இரக்கமுள்ளவராக இருக்கிறார். கடினமாக நேரத்திலும் அவர் அசர மாட்டார்.
அவருடைய இதயமும் ஆன்மாவும் ஒரு வகையானவை. அவருடைய பிறந்தநாளுக்கு எல்லாரும் வாழ்த்து தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவரை என் தாயாக பெற்றதில் நான் பெருமை அடைகிறேன். மேலும் இந்த ஆண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments