இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கமல்-ரஜினி பட நடிகை.. 100 ஆண்டுகால நட்பு குறித்து பெருமிதம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் படங்களில் நாயகியாக நடித்த நடிகை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவர்களை சந்தித்ததோடு இங்கிலாந்துக்கும் தனது நாட்டிற்கும் இடையே நூறாண்டு கால நட்பு இருக்கிறது என்று பெருமிதத்துடன் செய்த பதிவு வைரல் ஆகி வருகிறது.
நேபாள நாட்டை சேர்ந்த மனிஷா கொய்ராலா கமல்ஹாசன் நடித்த ’இந்தியன்’ ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ ஷங்கர் இயக்கத்தில் உருவான ’முதல்வன்’ மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பம்பாய்’ கமல்ஹாசன் நடித்த ’ஆளவந்தான்’, தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து பிரதமரின் அழைப்பிற்கு இணங்க லண்டன் சென்ற மனிஷா கொய்ராலா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘இங்கிலாந்து நாட்டிற்கும் நேபாளம் நாட்டிற்கும் இடையே 100 காலம் நட்பு உள்ளது என்றும் அந்த நட்பு இன்றும் தொடர்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து பிரதமர் அவர்களை சந்தித்து பேசியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் எங்கள் நாட்டில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு மலையேற வாருங்கள் என்று அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தான் நடித்த ’ஹீராமண்டி’ என்ற நெட்பிளிக்ஸ் தொடரை அவர் பார்த்து மகிழ்ந்ததாகவும் தன்னிடம் கூறியதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். மனிஷாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout