கமல்-லோகேஷ் கூட்டணியில் ரஜினி: ஆனால் ஒரு பெரிய திருப்பம்!

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தி வெளியானது.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு காரணமாக இந்த படம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் ரஜினி, கமல், லோகேஷ் கூட்டணியை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டதாகவும் இந்த முயற்சி தற்போது வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் அதில் ரஜினிகாந்த் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை கமல்ஹாசனுடன் இணைந்து ரஜினியும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் திருப்பமாக உள்ளது. ரஜினிகாந்த் கடந்த பல வருடங்களாக திரைப்படம் தயாரிக்காத நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'மஹா' படத்திற்காக மெகா போஸ்டர்: 1000 அடியில் அசத்திய சிம்பு ரசிகர்கள்!

சிம்பு நடித்த 'மஹா' திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்காக சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் மெகா போஸ்டர் அடித்து சாதனை

'இரவின் நிழல்' சர்ச்சை: மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர்

அஜித்தின் 'ஏகே 61' படத்தில் இந்த பிரபலமும் இணைகிறாரா?

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் 'ஏகே 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ரூம் போட்டு யோசிப்பாங்களோ? அஜித் பட பாடல் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்!

ரூம் போட்டு யோசிப்பாங்களோ என நடிகை சிம்ரன் பதிவு செய்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலா வருகிறது.

வரலட்சுமிக்கு கொரோனாவா? இந்த வீடியோவை பார்த்தா யாரும் நம்ப மாட்டாங்க!

நடிகை வரலட்சுமி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தால் அவருக்கு கொரோனா பாதிப்பு