பாஜகவில் கமல், ரஜினி பட நடிகைக்கு புதிய பதவி.. அண்ணாமலை வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு பாஜக மேலிடம் புதிய பதவியை அளித்துள்ளதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
தமிழ் திரை உலகில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூ கடந்த சில வருடங்களாக அரசியல் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் முதலில் திமுகவில் இணைந்த குஷ்பு, அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன்பின்னர் தற்போது பாஜகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூவுக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்ற புதிய பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பாக நடிகை குஷ்புவுக்கு தனது வாழ்த்துக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் உரிமைக்காக அவரின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இது.
அண்ணாமலையின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள குஷ்பூ, ‘தங்களின் ஆதரவும் மதிப்பும் எனக்கு என்றும் ஊக்கமாக இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments