திருமணமாகி 27 வருடங்கள்.. கணவருடன் கமல்-ரஜினி பட நாயகியின் புகைப்படம்..!
- IndiaGlitz, [Friday,March 17 2023]
கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை ஒருவர் திருமணமாகி 27 வருடங்கள் ஆனதை அடுத்து தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 1980 ஆம் ஆண்டு ’புதிய தோரணங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாதவி. அதன் பிறகு ரஜினிகாந்த் நடித்த ’தில்லுமுல்லு’ ’கர்ஜனை’ ’தம்பிக்கு எந்த ஊரு’ ’விடுதலை’ ஆகிய படங்களிலும், கமல்ஹாசன் நடித்த ’ராஜபார்வை’ ’டிக் டிக் டிக்’, ‘எல்லாம் இன்பமயம்’ ’சட்டம்’ ’காக்கி சட்டை’ ’மங்கம்மா சபதம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு தொழில் அதிபர் ரால்ஃப் ஷர்மா என்பவரை நடிகை மாதவி திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை மாதவி நியூ ஜெர்சியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது 27வது திருமண நாள் குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கணவருடன் இருக்கும் இந்த பதிவில் அவர் கூறியதாவது: 27 ஆண்டுகள் & காதல், சிரிப்பு, மகிழ்ச்சி, நட்பு மற்றும் தோழமை உங்களால் எனக்கு கிடைத்தது. மேலும் நம் 3 அழகான மகள்கள்..! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ரால்ப்!!! இறைவனின் அருளாலும், குருவின் ஆசியாலும் இன்னும் பல நன்மைகல் நடக்கும். எல்லாவற்றிற்கும் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி !!!!!