கோட்டையை நோக்கி நகரத் தொடங்கி விட்டோம்: கமல் அதிரடி

  • IndiaGlitz, [Wednesday,August 30 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை டுவிட்டர் மூலமும் பேட்டிகள் மூலமும் தெரிவித்து வருகின்றார். கமல் டுவிட்டர் அரசியலை மட்டும் செய்யாமல் களத்தில் இறங்க வேண்டும் என்று ஒருசில அரசியல்வாதிகள் அவரிடம் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் கோவையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசியல் பிரவேசத்தை டுவிட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன? தொடங்கியது தொடங்கியதுதான்

அரசியல் சூழலை இப்படியே விட்டுவைக்காமல் அதனை மாற்ற வேண்டியது நம் கடமை. இந்த அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது; தேவை வரும்போது கோட்டையை நோக்கி புறப்படுவோம்.

இந்த சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்துவிட்டோம். அரசியலில் அமைதியாக இருந்தால் அவமானம், தொடர்ந்து போராடுங்கள், விழித்திருங்கள். போராட்டத்தை இங்கிருந்தே தொடங்குங்கள், இது திருமண விழா அல்லாமல், ஆரம்ப விழாவாக இருக்க வேண்டும் என கமல் ஆவேசமாக பேசியுள்ளார்.

முதல்முறையாக கமல்ஹாசனின் பேச்சில் கோட்டையை நோக்கி புறப்படுவோம்' என்று இருப்பதால் கமல் தீவிர அரசியலில் இறங்கிவிட்டதாகவே தெரிகிறது.