கட்சியை பலப்படுத்த கமல் எடுக்கும் அதிரடி முடிவு!     

ஒரே நேரத்தில் பிக்பாஸ், திரைப்பட படப்பிடிப்பு மற்றும் அரசியல் என மூன்று துறைகளில் பிசியாக இருந்து வரும் கமல்ஹாசன், விரைவில் அவர் நடிக்க இருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் தனது அரசியல் கட்சியை பலப்படுத்த அவர் அதிரடி முடிவை எடுத்துள்ளார். தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கு என ஒரு சொந்த தொலைக்காட்சி சேனலை வைத்திருக்கும் நிலையில், மக்கள் நீதி மையம் கட்சிக்காக ஒரு புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். இது குறித்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் புதிய சேனல் மக்கள்நீதிமய்யம் கட்சிக்காக ஆரம்பிக்கப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவில் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசன் அவர்கள் தனது பிறந்த நாளிலிருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பணியை தொடங்குவார் என்றும் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் 'இந்தியன் 2' மற்றும் 'தலைவன் இருக்கின்றான்' படங்களின் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் சேனல் ஆரம்பிக்கும் பணிகள், அதனை அடுத்து தேர்தல் பிரச்சாரம் என கமலஹாசன் அதிரடியாக களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தொழில் சரிவை சரிகட்ட அசின் கணவரின் புதிய முயற்சி

அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை அசின் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

டாப்ஸி நடிக்கும் ஸ்போர்ட்ஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு

இந்திய திரையுலகில் தற்போது அதிக ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. தமிழிலும் 'பிகில்' உள்பட ஒருசில ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் உருவாகி வரும்

பிக்பாஸ் வீட்டில் தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்ட வனிதா! 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் கிராமத்து கலைகளின் டாஸ்க் காரணமாக சண்டை சச்சரவு இல்லாமல் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்து

'நம்ம வீட்டு பிள்ளை' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்ட்ராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்: சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினிக்கு அடுத்து திரையுலகில் முதலிடத்தில் விஜய் தான் இருப்பார்