முள்ளும் மலரும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,April 02 2019]

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமான நிலையில் தமிழ் திரையுலகமே அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா, கே.பாக்யராஜ், வெற்றிமாறன், உள்பட பல திரையுலக பிரமுகர்கள் அவரது உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினர்

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் மகேந்திரன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

தங்கப்பதக்கம்’ காலத்திலிருந்தே அவரைத் தெரியும். பிறகு கூடி பல படங்கள் செய்திருக்கிறோம். ஆனால், முதலில் 'முள்ளும் மலரும்' படத்தில்தான் நான் நடிப்பதாக இருந்தது. தமிழ்ப் படங்கள் அதிகமாகச் செய்ய ஆர்வமில்லாமல் இருந்த பாலு மகேந்திராவையும் இவரையும் என்னுடைய வீட்டில் சந்திக்க வைத்தது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இரண்டு பேர் கையையும் சேர்த்துவைத்து, ‘வெற்றிப் படங்கள் எடுங்கள்’ என்று சொன்னேன். அதுபோலவே அவர்கள் செய்தார்கள்.

அந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட புரொடக்‌ஷன் மேனேஜர் மாதிரி எல்லாம் வேலை பார்த்துள்ளேன். ஏனென்றால், படம் அற்புதமான படம் என்று எனக்குத் தெரியும். எந்தவொரு காரணத்தைக் கொண்டும் நின்றுவிடக்கூடாது என்று நாங்கள் அனைவரும் சேர்த்து வெளிக்கொண்டு வந்த படம்தான் 'முள்ளும் மலரும்'. அதற்குப் பிறகு பல அற்புதமான படங்களைக் கொடுத்துள்ளார்.

அவரைப் பார்த்து, சினிமா எடுக்க வேண்டும் என்று ஒரு இளைஞர் கூட்டமே வந்தது என்று சொன்னால் மிகையாகாது. அவரது முடிவு, உச்சத்தைத் தொட்ட பிறகுதான் ஏற்பட்டு இருக்கிறது என்பதில் சந்தோஷம். பல திறமைசாலிகள் திறமை வெளிவராமலேயே சென்றதைப் பார்த்திருக்கிறேன். இவருடைய நினைவுகள் தமிழ் சினிமாவில் என்றும் தாங்கி நிற்கும்.