ரஜினி விவகாரம் குறித்து கமல் கட்சி பதிவு செய்த டுவீட்?

ரஜினிகாந்த்-பெரியார் விவகாரம் கடந்த ஒரு வாரமாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது தெரிந்ததே. குறிப்பாக நேற்று ரஜினிகாந்த் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதிலிருந்து தமிழக அரசியல் களமே கொந்தளித்துள்ளது. ரஜினிக்கு எதிராக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரான கமலஹாசன் இந்த விஷயத்தில் இன்னும் அமைதியாக இருப்பதாக தெரிகிறது. ஒரு பக்கம் தான் பெரிதும் மதிக்கும் பெரியார், இன்னொரு பக்கம் தன்னுடைய உயிர் நண்பன் ரஜினிகாந்த் என்பதால் கமலஹாசன் அமைதியாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமலஹாசனின் மக்கள்நீதிமய்யம் கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தை 'வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை' என்று கமலஹாசன் கூறிய ஒரு வசனத்தை புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளது. இந்த பதிவு மூலம் கமல்ஹாசன், ரஜினிக்கு மறைமுக ஆதரவு கொடுக்கின்றாரா? அல்லது ரஜினிக்கு எதிராக போராடும் பெரியார் ஆதரவாளர்களை அமைதியாக இருக்கும்படி கூறுகின்றாரா? என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். மொத்தத்தில் வழக்கம்போல் கமல்ஹாசன் ஒரு புரியாத பதிவை பதிவு செய்திருப்பதாகவே கூறப்படுகிறது.

More News

இளம்பெண்ணை காருடன்  கடத்திய பள்ளி மாணவர்கள்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் இளம்பெண் ஒருவரை பள்ளி மாணவர்கள் 3 பேர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு என்ற பகுதியில் ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது

தனுஷ்-ராம்குமார் படம் குறித்த புதிய தகவல்!

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி

அந்த பத்து பேர்களில் அஜித் ரசிகர்கள் சிக்குவார்களா?

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் காரசாரமாக மோதிக்கொண்டு வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆபாச பதிவு செய்பவர்கள்

'மாஸ்டர்' படத்தின் புதிய ஸ்டில்: இணையதளங்களில் வைரல்

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும்,

ரஜினிகாந்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறிய அறிவுரை

சென்னை  - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 43 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 9 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.