மக்கள் நீதி மய்யம்' கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் எங்கே? எப்போது?

  • IndiaGlitz, [Thursday,February 22 2018]

கமல்ஹாசனின் புதிய கட்சியான 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியின் தொடக்கவிழா நேற்று மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல விஐபிக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கமல் ரசிகர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் திரண்டிருந்த இந்த பொதுக்கூட்டம் தமிழக அரசியல் கட்சிகளை ஆச்சரியமடைய செய்துள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் சுற்றுப்பயணம் ஏற்கனவே சிவகெங்கை உள்பட மற்ற நகரங்களுக்கும் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நேற்றைய மதுரை பொதுக்கூட்டம் போல் இன்னொரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் திருச்சியில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறும் என்று கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் பிரச்சனைக்காக திமுக உள்பட அனைத்து கட்சிகளுடன் கைகோர்ப்போம் என்றும், தேர்தல் கூட்டணி என்று வரும்போது இனிமேல் தான் எங்கள் கட்சி கூடி பேசி முடிவெடுக்கும் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

More News

இந்தியன் 2: மோடி மோசடியை கையில் எடுக்கின்றாரா கமல்?

கமல்ஹாசனை உலக நாயகன் என்பது மட்டுமின்றி 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் என்றும் அவரது ரசிகர்கள் கூறலாம். அந்த அளவுக்கு நேற்று பிரமாண்டமாக தனது கட்சியின் தொடக்கவிழாவை அமைதியாக நடத்தி காட்டினார்.

கடைக்குட்டி சிங்கம் டைட்டில் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

கார்த்தி நடிப்பில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹாலிவுட் பாணியில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

ரஜினியை ரகசியமாக சந்தித்தது எப்போது? கமல் விடுவித்த புதிர்

அரசியலுக்கு வருவது குறித்து ஆசான்களை சந்திப்பதற்கு முன்பே நண்பர் ரஜினிகாந்த் அவர்களை ரகசியமாக சந்தித்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

13 வருடங்களுக்கு பின் கமல்-ரஜினி கொடுக்கும் சர்ப்ரைஸ்?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இன்னும் ஒருசில வாரங்களில் ரஜினியும் தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்