குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கமல்ஹாசன் எடுத அதிரடி முடிவு
- IndiaGlitz, [Monday,December 16 2019]
மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சட்டத்திற்கு இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமின்றி கடந்த இரண்டு நாட்களாக மாணவர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஒருசில இடங்களில் இந்த போராட்டத்தால் வன்முறை வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் குடியிருப்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி சார்பிலும் இந்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அக்காட்சி கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
முன்னதாக இந்த சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்ட நிலையில் இதில் நீதிமன்றம் தலையிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்