ஒரு தொகுதி போச்சே! கமல் கட்சி வேட்பாளருக்கு நிகழ்ந்த சோகம்!

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைவதால் கமல்ஹாசனால் அறிவிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் இன்று காலை முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் வேட்பாளர் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய மதியம் 3.20க்கு வந்தார். ஆனால் வேட்புமனு தாக்கல் நேரம் 3 மணியுடன் முடிந்துவிட்டதால் அவரது வேட்புமனு ஏற்க தேர்தல் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். செந்தில்குமார் எவ்வளவோ வாதாடியும் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை

இதனால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த மக்கள் நீதி கட்சியின் தொண்டர்கள் தங்கள் வெற்றியில் ஒரு தொகுதி குறைந்து போனதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்!

நடிகர் விஜய்சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. மேலும் அவர் நடித்து முடித்துள்ள மற்ரொரு திரைப்படமான 'மாமனிதன்' ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.  

சிறுமியை கொலை செய்து புதைத்ததா திருநாவுக்கரசு கும்பல்? அதிர்ச்சி தகவல்

பொள்ளாச்சி விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்பட நான்கு பேர் கைது செய்யபப்ட்டு விசாரணை நடந்து வருகிறது.

பிரபல அரசியல் கட்சியில் இணைந்த ரஜினியின் நெருங்கிய நண்பர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இன்னும் அவர் கட்சி தொடங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

6 வயது சிறுமி காயங்களுடன் பிணமாக மீட்பு: பாலியல் பலாத்காரம் செய்து கொலையா?

கோவை அருகே ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் மர்மமான முறையில் ரத்தக்காயங்களுடன் சற்றுமுன் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவுக்கு ஆதரவு அளித்த பிரபல நடிகரின் கட்சி

பிரபல நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.