கமல் அல்லது அஜித் முதல்வராக வேண்டும்: சுசீந்திரன்

  • IndiaGlitz, [Thursday,November 23 2017]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் கடந்த இரண்டு நாட்களாக கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த அசோக்குமாரின் மரணம் குறித்து தனது கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார். குறிப்பாக அஜித் உள்பட பலர் இந்த கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் தகவலை நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சினிமாத்துறையினர்களின் நலன்காக்க சினிமாத்துறையை சேர்ந்த ஒருவரே தமிழக முதல்வராக வேண்டும் என்ற கருத்து தற்போது கோலிவுட் திரையுலகினர்களிடையே பரவி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் சுசீந்திரன், 'சினிமா துறையில் இருந்து அடுத்து யார் முதல்வராக வர தகுதியானவர்கள் என்ற கேள்விக்கு நான் அளித்த பதில் கமல் அல்லது அஜித் வந்தா நல்லா இருக்கும்' என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் ஏற்கனவே அரசியலில் குதித்துவிட்டதாக கூறி வருவதுடன் அரசியல் கட்சியை தொடங்கும் பணியிலும் உள்ளார். அதேபோல் அஜித்தும் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாக நேற்று ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி கூறியுள்ளார். சுசீந்திரனின் ஆசை எப்போது பலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்