திராவிட கட்சிகளை அகற்ற ரஜினி-கமல் இணையவேண்டும்: தமிழருவி மணியன்

  • IndiaGlitz, [Sunday,September 17 2017]

சமீபத்தில் தனியார் விழா ஒன்றில் பேசிய கமல்ஹாசன், அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினிகாந்த் விரும்பினால் தனது அணியில் இணைத்து கொள்ள தயார் என்று பேசினார். இதனால் கமல்-ரஜினி அரசியலில் இணைந்து செயலாற்ற ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருபவரும், அதற்காக சமீபத்தில் திருச்சியில் மாபெரும் கூட்டத்தை நடத்தியவருமான காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் இதுகுறித்து கூறியபோது, 'ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளை மூன்று மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டார். ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கமல்தான் ரஜினியோடு இணைய வேண்டும் என்றும் ரஜினி கமலோடு இணையத் தேவையில்லை' என்றும் இருவரும் இணைந்து செயல்பட்டால் தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளை அகற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே அரசியல் பாதைக்கு அடித்தளம் போட்டுக்கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும் இன்னும் இருவருமே அதிகாரபூர்வமாக அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பேசவில்லை. இந்த நிலையில் யார் யாரோடு இணைய வேண்டும் என்பது குறித்து இப்போதே கருத்துகூற வேண்டிய அவசியமில்லை என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

More News

இன்று தமிழ் இனம் நன்றி சொல்லும் நாள்: கமல்ஹாசன்

தமிழக மக்கள் தமிழ் இனத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூக நீதியை காத்த தந்தை பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்

விஷாலின் துப்பறிவாளன்: முதல் இரண்டு நாள் வசூல் விபரம்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடந்த வியாழன் அன்று வெளியானது

சாரண, சாரணியர் இயக்க தேர்தல்: எச்.ராஜா தோல்வி

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று சென்னை மெரினாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், பி.மணியும் போட்டியிட்டனர்.

வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: மாதவனுக்கு சூர்யா அனுப்பிய குறுஞ்செய்தி

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் படம் 'மகளிர் மட்டும்'.

'சாவித்ரி' வாழ்க்கை வரலாறு படத்தில் ரஜினியின் நண்பர்

பழம்பெரும் நடிகை நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் உருவாகி வருகிறது.