திராவிட கட்சிகளை அகற்ற ரஜினி-கமல் இணையவேண்டும்: தமிழருவி மணியன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் தனியார் விழா ஒன்றில் பேசிய கமல்ஹாசன், அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினிகாந்த் விரும்பினால் தனது அணியில் இணைத்து கொள்ள தயார் என்று பேசினார். இதனால் கமல்-ரஜினி அரசியலில் இணைந்து செயலாற்ற ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருபவரும், அதற்காக சமீபத்தில் திருச்சியில் மாபெரும் கூட்டத்தை நடத்தியவருமான காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் இதுகுறித்து கூறியபோது, 'ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளை மூன்று மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டார். ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கமல்தான் ரஜினியோடு இணைய வேண்டும் என்றும் ரஜினி கமலோடு இணையத் தேவையில்லை' என்றும் இருவரும் இணைந்து செயல்பட்டால் தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளை அகற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே அரசியல் பாதைக்கு அடித்தளம் போட்டுக்கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும் இன்னும் இருவருமே அதிகாரபூர்வமாக அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பேசவில்லை. இந்த நிலையில் யார் யாரோடு இணைய வேண்டும் என்பது குறித்து இப்போதே கருத்துகூற வேண்டிய அவசியமில்லை என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com