கமல்ஹாசனின் அடுத்த பட தலைப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 24 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படம் கடந்த தீபாவளி தினத்தில் ரிலீஸாகி நல்ல வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வெளிவந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டபோதிலும் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை


கமல்ஹாசன் தனது அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. மேலும் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் மெளலியுடன் இணைந்தும் ஒரு படத்தில் கமல்ஹாசன் பணிபுரியவுள்ளார் என்றும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் கமல்-மெளலி இணையும் படத்தின் தலைப்பு குறித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு 'பரமபதம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.